கோடி அற்புதர் உவரி புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஜாதி மத வேறுபாடு இன்றி ஏராளமானோர் பங்கேற்பு
நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்த உவரி புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென் மாவட்டத்தில் கோடி அற்புதர் என அழைக்கப்படும் உவரி புனித அந்தோணியார் ஆலயம் கத்தோலிக்க ஆலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது
இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும் நிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
பாளையங்கோட்டை முன்னாள் மறை மாவட்ட ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமை தாங்கி கொடியை அர்ச்சித்து கொடி மரத்தில் கொடியேற்றினார். அதைத் தொடர்ந்து பக்தர்களால் பலூன் பறக்கவிட்ட நிலையில் கொடிமரம் மற்றும் ஆலயம் அலங்கார மின்விளக்குகளால் எரிய விடப்பட்டது. இதைத்தொடர்ந்து மறை மாவட்ட பொருளாளர் பிரதீப் மறையுறை ஆற்றினார். பின்னர் பக்தர்கள் ரோஜா பூ மாலையும் கைத்தறி துண்டுகளையும் காணிக்கையாக செலுத்தினர்.
13 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் காலை திருயாத்திரை திருப்பலியும் மாலை நற்கருணை ஆசிரும் ஜெபமாலையும் நடைபெறும். வரும் பிப்ரவரி 16ஆம் தேதி காலை பெருவிழா கூட்டு திருப்பலியை தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி நடத்துகிறார். இரவு 10மணிக்கு புனித அந்தோணியாரின் சப்பரபவனி நடைபெறுகிறது
கொடியேற்று விழாவில் தமிழகம் கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவிழா ஏற்பாடுகளை பங்கு இறைமக்கள் பங்குத்தந்தையர் அருட்கன்னியர் செய்துள்ளனர்.
ஜாதி மத வேறுபாடு இன்றி ஏராளமானோர் பங்கேற்பு