கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே திக்கணங்கோடு மெயின் கால்வாயில் இருந்து அரசு தொடக்க பள்ளி அருகில் உள்ள சட்டர் வழியாக தக்கலை நீர்வ ளத்துறைக்கு சொந்தமான மத்திகோடு கிளை கால்வாய் பாய்ந்து செல்கிறது.
இந்த கால்வாய் மூலம் மணலிக்காட்டுவிளை, அரித்தினான் விளை, பொட்டக்குளம், காட்டுக்குளம், செட்டிகுளம், மூத்திராங்குளம் உட்பட பல ஊர்களில் உள்ள 25க்கும் மேற்பட்ட குளங்கள் மட்டுமின்றி 500 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பயன்பட்டு வருகின்றது.
குறிப்பாக இந்த நிலங்களில் விவசாயிகள் வாழை, தென்னை, மரசீனி, காய்கறி போன்ற பயிற்களை பயிரிட்டு வருகின்றனர். தற்போது மத்திகோடு பகுதியில் தனி நபர் ஒருவர் கால்வாய் பக்க சுவர்களை உடைத்து காம்பவுண்ட் சுவர் கட்டி விவசாயத்திற்கு தண்ணீர் செல்வதை தடை செய்து பிளாட் போட்டுள்ளார். இதனால் விவசாயத்துக்கான தண்ணீர் தடைபட்டுள்ளது.
ஆகவே விவசாயிகள், பொதுமக்கள் அந்த பகுதில் உள்ள அனைத்து ஆக்ரமிப்புகளையும் அகற்றி முன்பு இருந்ததை போன்று மத்திகோடு கிளை கால்வாய் வழியாக அனைத்து கடைவரம்பு பகுதிகளுக்கும், விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விட்டு பாசன வசதிக்கு உதவி செய்ய மாவட்ட ஆட்சியாளர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.