திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஆசாத் தெருவில் NIA அதிகாரிகள் பாபா பக்ருதீன் என்பவர் வீட்டில் தொடர்ந்து சோதனைகளில் ஈடுபட்டனர்..

இவர் பாபா பக்ருதீன் பல்வேறு தீவிரவாத அமைப்புகளில் தொடர்பு இருப்பதாகவும் தடை செய்யப்பட்ட கிலாபாத் , ஹிஸ்புல் தகரினா உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களில் தொடர்பு இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் மதங்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு பரப்புரை செய்வதாக கூறி பாபா பக்ருதீன் என்பவர் வீட்டில் இன்று காலை முதலே சோதனையானது நடைபெற்று வந்தது.

இந்த சோதனை குறிப்பாக 4 மணி நேரமாக தற்பொழுது அவர் வீட்டில் நடைபெற்றது. ஏற்கனவே இவரது வீட்டில் 16.09.2021ல் NIA சோதனையானது நடைபெற்றது. இந்த சோதனைகள் முக்கிய ஆவணங்கள் அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டு NIA அதிகாரிகள் கொண்டு சென்றனர். பிறகும் அதே போல இன்று தற்பொழுது NIA அதிகாரிகள் வந்து தற்பொழுது சோதனை நடத்தி பாபா பக்ருதீனை மேற்கொண்டு விசாரணை செய்ய சென்னைக்கு NIA அதிகாரிகள் அழைத்து சென்றனர்.