கோவில் தந்திரிகள் கொடி மரத்திற்கு பூஜைகள் செய்து திரு கொடியேற்றம் செய்து வைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவில் ஒன்று 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது கோவில் மூலவர் நாகராஜ சுவாமி ஆகும். குமரி மாவட்டம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள பக்தர்களும் நாக தோஷம் தீர்வதற்காக கோவிலுக்கு விரதம் இருந்து வந்து செல்வது வழக்கம் அத்தகைய சிறப்பு வாய்ந்த நாகராஜா கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தை மாத திருவிழா பத்து நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்
அந்த வகையில் இன்று காலை சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கொடி ஏற்ற நிகழ்ச்சி நடைபெற்றது கோவில் தந்திரிகள் கொடி மரத்திற்கு பூஜைகள் செய்து திரு கொடியேற்றம் செய்து வைத்தனர். குமரி மாவட்டம் மட்டுமல்ல அண்டை மாவட்ட மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். பத்து நாள் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் சிறப்பு வழிபாடுகள் சிறப்பு அபிஷேகங்கள் புஷ்ப வாகனம், சிங்க வாகனம், கமல வாகனம், ஆதிசேஷ வாகனம். யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஒவ்வொரு நாளும் சுவாமி எழுந்தருளி வீதி உலா வருதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. ஒன்பதாவது நாள் திருவிழாவான வரும் 11 ஆம் தேதி தேரோட்ட திருவிழாவும் பத்தாம் நாள் திருவிழாவான வரும் 12 ஆம் தேதி ஆராட்டு நிகழ்சியுடன் தைத்திருவிழா முடியும்.