இந்த சுவாரசிய சம்பவம் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் நடைபெற்று உள்ளது.

வனப்பகுதியை விட்டு வெளியேறி பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய வனவிலங்கான புலி மற்றும் சிறுத்தைகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிப்பது வழக்கம் அதேபோல கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் மானா மங்கலம் கிராமத்தில் வனத்துறையினர் வளர்த்து வந்த மலை அணில் ஒன்று வனத்துறையினரிடமிருந்து தப்பிச்சென்று அருகிலுள்ள மானாமங்கலம் கிராமத்தில் மரங்களில் பதுங்கி இருந்து அந்த வழியாக செல்லும் பொது பொதுமக்கள் மீது தாவி கடித்து காயப்படுத்தி வந்துள்ளது இந்த மலை அணிலைதான் வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்துள்ளனர்,

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மலை அணிலை பிடிப்பதற்கு கடந்த இரண்டு வார காலமாக வனத்துறையினர் கூண்டு வைத்து காத்திருந்த நிலையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த மலைஅணில் கூண்டுக்குள் சிக்கியது இதை அடர்ந்த வனப் பகுதிக்குள் கொண்டு சென்று விடுவதற்கு வனத்துறையின நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்

திருச்சூர் மாவட்டம் மானா மங்கலம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலை அணில் ஒன்று தாயை இழந்து தவிர்த்து வந்துள்ளது இந்த மலை அணில் குட்டியை பிடித்து வனத்துறையினர் வளர்த்தி வந்தனர் இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வனத்துறையினர் வளர்த்து வந்த மலை அணில் கூண்டுக்குள் இருந்து தப்பி சென்றுள்ளது தப்பிச்சென்ற மலை அனில் மானாமங்கலம் பகுதிகளில் மரத்தில் இருந்து கொண்டு அந்த பகுதியில் செல்லும் பொது மக்கள் மீது தாவி அவர்களை கடித்து துன்புறுத்தி வந்துள்ளது தகவல் அறிந்து சென்ற வனத்துறையினரையும் இந்த மலை அணில் கடித்துள்ளது இதைத்தொடர்ந்து இதை பிடிக்க கூண்டு ஒன்றை வைத்து மலை அணிலுக்கு பிடித்த உணவான தக்காளியை கூண்டுக்குள் வைத்து காத்திருந்தனர் எதிர்பார்த்தது போலவே பொது மக்களை அச்சுறுத்தி வந்த மலைஅணில் கூண்டுக்குள் பிடிபட்டுள்ளது தற்போது இந்த அணிலை அடர்ந்த வனப்பகுதியில் விடுவதற்கு வனத்துறையினர் ஆலோசித்து வருகிறார்கள்.