
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த கொடுவாய் பகுதியில் சிலர் சட்டவிரோதமாக மண்ணுளி பாம்புகளை பிடித்து விற்பனை செய்வதாக காங்கேயம் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து காங்கேயம் வனச்சரக அலுவலர் மற்றும் அவரது குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்து 4 பேரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
இதில் தஞ்சாவூரை சேர்ந்த பால்சாமி, சிவன்மலையை சேர்ந்த முருகேசன், கன்னிவாடியை சேர்ந்த சதிஷ், புதுக்கோட்டையை சேர்ந்த சந்திரன் ஆகியோர் மண்ணுளி பாம்பை சட்டவிரோதமாக விற்க முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து 4 பேரையும் வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.