
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலுக்கு தை அமாவாசை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய வந்த செய்யார் தாலுகா பெரிய செங்காடு கிராமத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் தனது மனைவி விஜயலட்சுமி 28
உடன் கோயிலுக்கு வந்துள்ளார்
இரவு கோயில் கொடிமரம் அருகே உள்ள இடத்தில் மனைவியுடன் உறங்கி கொண்டிருந்தவர் திடீரென காணாமல் போனதால்
அதிர்ச்சி அடைந்த கணவர் மேல்மலையனூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தார்.
சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட மேல்மலையனூர் போலீசார் கோயில் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை பரிசோதித்ததில் சாமியார் அவர்களுடன் பெண் பேசிக்கொண்டிருந்தது தெரியவந்ததை எடுத்து காணாமல் போன பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அப்பெண் சாமியாருடன் சென்றுள்ளாரா அல்லது வேறு ஏதாவது பிரச்சனை உள்ளதா என போலீசார் தீவிரமாக காணாமல் போன பெண்ணை தேடி வரும் சம்பவம் மேல்மலையனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது