அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சுத்தமல்லி பெரிய ஓடையில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் திருடப்படுவதாக தா.பழூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் பேரில் தா.பழூர் போலீசார் சுத்தமல்லி முக்கிய சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அவ்வழியாக வந்த 3 மாட்டு வண்டிகளை நிறுத்தி சோதனை செய்த போது மாட்டு வண்டியில் மணல் அள்ளி வருவது தெரியவந்தது இதனையடுத்து
மூன்று மாட்டு வண்டிகளையும் பறிமுதல் போலிசார் காவல் நிலையத்தில் நிறுத்தி உள்ளனர். மேலும் மாட்டுவண்டி உரிமையாளர்களான வாணதிரையன்பட்டினம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ், அறிவானந்தம் மற்றும் காங்கேயன்குறிச்சி கிராமத்தை சேர்ந்த மணியரசன் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர் மேலும் மாட்டு வண்டியில் மணல் அள்ளுவதற்காக கூலி வேலைக்கு சென்ற பருக்கல் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்