
இன்று கோவை வருகை புரிந்துள்ள உயர் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு கோ வி செழியன் அவர்களை கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் வரவேற்று வேகமாக வளர்ந்து வரும் சூலூர் தாலுகாவிற்கு அரசு கலைக் கல்லூரி அமைய வேண்டுமென மனு கொடுத்தவுடன் அதைப் படித்துப் பார்த்து இந்த நிதியாண்டில் கண்டிப்பாக கழகத் தலைவர் திராவிட நாயகர் தமிழக முதல்வர் மற்றும் மாண்புமிகு துணை முதல்வர் இளந்தலைவர் அவர்களுடைய அனுமதியுடனும் பொறுப்பு அமைச்சர் மாண்புமிகு செந்தில் பாலாஜி அவர்களின் ஆலோசனையின் படியும் அனுமதி அளிக்கப்படும் என்று உறுதி அளித்தார்.மனு கொடுத்த உடனேயே மனுவை பரிசீலித்து அரசு கல்லூரி அமைய ஆவன செய்வேன் என்று உறுதி அளித்த மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கு சூலூர் தொகுதி மக்களின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிக்கு தளபதி முருகேசன் கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர்.