சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குமரி கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபம்,கண்ணாடி கூண்டு பாலத்திற்கு சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்து பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிர்வாகம் அறிவிப்பு. கடலின் தன்மையை பொறுத்து படகு சேவை ஆரம்பிப்பது குறித்து ஒலி பெருக்கி மூலமாக சுற்றுலா பயணிகளுக்கு அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
உலக சுற்றுலா தலங்களில் மிக முக்கியமானது இந்தியாவின் தென் கோடியில் அமைந்துள்ள குமரிமுனை.இங்கு கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை கண்டு ரசிப்பதற்காகவும் அதைப்போல் காலை, மாலை வேளைகளில் கடலில் சூரியன் உதயம் மற்றும் மறையும் இயற்கை காட்சியை கண்டு ரசிப்பதற்காகவும் உள்ளூர்,வெளியூர், வெளிநாடுகளில் இருந்து தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். இந்நிலையில் குமரி கடல் பகுதியில் வீசி வரும் பலத்த காற்று மற்றும் கடல் அலைகள் கடும் சீற்றத்துடன் பல அடி உயரத்திற்கு எழும்பியவாறு ஆக்ரோஷத்துடன் காணப்படுவதாலும், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குமரி கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபம்,கண்ணாடி கூண்டு பாலத்திற்கு சுற்றுலா படகு சேவை இன்று இரண்டாவது நாளாக தற்காலிகமாக ரத்து செய்து பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.வரும் கால நிலையையும், கடலின் தன்மையையும் பொறுத்து படகு சேவை ஆரம்பிப்பது குறித்து ஒலி பெருக்கி மூலமாக சுற்றுலா பயணிகளுக்கு அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.