கடந்த பொங்கல் விடுமுறை கொண்டாட்டத்தின் கடைசி நாளான காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரையை குப்பை கூலமாக மாற்றியது குறித்து பசுமை தீர்ப்பாயம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.
காணும் பொங்கல் தினத்தன்று மெரினா கடற்கரையில் அதிக அளவு பொதுமக்கள் குவிந்தனர். அந்த நேரத்தில் பொதுமக்களால் போடப்பட்ட குப்பைகள் டன் கணக்கில் குவிந்தது.
இந்நிலையில் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
குப்பை கொட்டுபவர்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்கும் வகையில் சிறப்புப் படைகள் அமைக்க வலியுறுத்திய பசுமை தீர்ப்பாயம், இது சம்பந்தமாக விளக்கம் அளிக்கும்படி சென்னை மாநகராட்சியின் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த நிலை தொடர்ந்தால் காணும் பொங்கல் விடுமுறையை ரத்து செய்ய அரசுக்கு பரிந்துரைக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தது.