திருப்பூர் மங்கலம் சாலை பாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், மணி மஞ்சுளா தம்பதியர் இவர்களது மகளான வர்ஷிகா ஜெய்வாபாய் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார் தடகளத்தில் ஆர்வம் மிகுந்த வர்ஷிகா பள்ளி மூலம் மாவட்ட, மாநில அளவிலான பல்வேறு போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டார். கடந்த ஆறாம் தேதி நடைபெற்ற தேசிய அளவிலான தடகள போட்டியில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட இவர் தங்க பதக்கம் வென்றார். இதில் 80 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் 12.20 வினாடிகளில் ஓடி புதிய சாதனையையும் படைத்துள்ளார். மேலும் 4*100 தொடர் ஓட்ட போட்டியிலும் பங்கு பெறுவதற்கு தேர்வாகி உள்ளார். மீண்டும் திருப்பூர் திரும்பிய வர்ஷிகா இன்று பள்ளிக்கு வருகை தந்தார் அவருக்கு ஆசிரியர்கள் சக மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.