தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை முன்னிட்டு பள்ளி கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள எல் ஆர் ஜி அரசு மகளிர் கல்லூரியில் இன்று பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கல்லூரியில் படிக்கின்ற 2500 மாணவிகள் பாரம்பரிய சேலை அணிந்து கலந்து கொண்டனர். கல்லூரி மைதானம், வகுப்பறைகள் என பல்வேறு இடங்களில் குழுவாக பொங்கல் வைத்து குலவையிட்டனர். பாரம்பரிய உடையான சேலை அணிந்து வந்த கல்லூரி மாணவிகள் புது கோலமிட்டு, ஆசிரியர்கள், நண்பர்களிடம் பொங்கல் நல்வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.