விழுப்புரம் மாவட்டம் அரசூர் அருகே சேமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முத்துக்குமார் அவருடைய நண்பர் அதே ஊரைச் சேர்ந்த தமிழரசன் என்பவர் முத்துக்குமாரின் ரூ. 8 லட்சம் பணத்தை பெற்று திரும்பி கொடுக்காததால் அவரை கொலை செய்து மலட்டாற்றில் புதைத்ததாக தெரிவித்தார். கடந்த வாரம் தோண்டி பார்த்தும் சடலம் கிடைக்கவில்லை இந்நிலையில் தமிழரசன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்
இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதி முதல் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் தமிழரசனை 5 நாள் போலீஸ் காவல் எடுத்து விசாரணை செய்து வந்தனர். விசாரணையில் அவர் தமிழரசனின் நிலத்திலேயே புதைத்ததாக அளித்த தகவல் பேரில் தற்போது அந்த சடலத்தை திருவெண்ணெய்நல்லூர் போலீசார் தோண்டி எடுத்துள்ளனர் தொடர்ந்து தமிழரசனிடம் கொலைக்கு வேறு யாராவது உடனடியாக இருந்தார்களா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். மீண்டும் இன்று மாலை தமிழரசனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர்
மூன்று மாதத்திற்கு பிறகு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இடம் கண்டுபிடித்து சடலத்தை தோண்டி எடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியது