சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை திருப்பூர் வடக்கு தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. மது போதையில் வாகனம் ஓட்டாதீர் இருசக்கர வாகனத்தில் இருவருக்கும் மேல் பயணம் செய்யாதீர் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்க கூடாது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அறிவிப்பு பதாகைகள் மூலம் இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்றனர். திருப்பூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வாகன பேரணியை மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் துவக்கி வைத்தார். தொடர்ந்து பழைய பேருந்து நிலையம் வழியாக நொச்சி பாளையம் பிரிவு வரை வாகன பேரணி நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் பேரணியாக சென்றனர்.