சங்கரன்கோயிலில் தனியார் கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான குட்டியானை வாகனத்தில் சிலிண்டர் இல்லாதபோது திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு.
அரை மணி நேரம் போராட்டத்திற்குப் பின்பு தீயணைப்பு மீட்பு படையினர் அனைத்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ராஜபாளையம் பிரதான சாலையில் வணிக நிறுவனங்கள் பெரும்பாலாக இருக்கக்கூடிய சாலையில் தனியார் எரிவாயு நிறுவனத்திற்கு சொந்தமான குட்டி யானை வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திலிருந்து திடீரென தீப்பற்றி எரிந்தது. வாகன ஓட்டுநர் எரிவாயு சிலிண்டர்களை இறக்கி வைத்து விட்டு வேலையை முடித்துவிட்டு சாலையோரமாக நிறுத்தி இருந்தார். திரும்பி வந்து பார்க்கும்போது வாகனத்தின் முன் பகுதியில் தீ பற்றி எளிய தொடங்கியது. எரிவாயு சிலிண்டர் லோடு இல்லாமல் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மீட்பு படையினர் அரை மணி நேரம் போராடி குட்டி யானை வாகனத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

சங்கரன்கோவில் தனியார் கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான வாகனமானது வணிக நிறுவனங்கள் அதிகமாக இருக்கும் ஊரின் மையப் பகுதியில் இருக்கும்போது திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பொதுமக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.