கன்னிவாடி வனச்சரகத்தில் நீலமலைக்கோட்டை ,கிணத்துப்பட்டி, புதுஎட்டப்ப நாயக்கன்பட்டி, பண்ணைப்பட்டி, கோம்பை பகுதிகளில் விவசாய நிலங்களில் சேதம் ஏற்படுத்தும் காட்டு யானைகளை கட்டுப்படுத்த டாப்ஸ்லிப் யானைகள் முகாமிலிருந்து சின்னத்தம்பி என்ற கும்கி யானையும் முதுமலை யானைகள் முகாமில் இருந்து கிருஷ்ணா என்ற கும்கி யானையும் நீலமலை கோட்டைக்கு வரவழைக்கப் பட்டுள்ளது. மேலும் தேனி வைகை அணையில் இருந்து திலீபன் வனச்சரக அலுவலர் தலைமையில் வன உயர் அடுக்கு படை மற்றும் ஒட்டன்சத்திரம் வத்தலகுண்டு வனச்சரகங்களில் இருந்து அதிவிரைவு படை வரவழைக்கப்பட்டு திண்டுக்கல் மண்டல வனப் பாதுகாவலர் காஞ்சனா மற்றும் திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் அவர்களின் அறிவுரையின்படி கன்னிவாடி வனச்சரக அலுவலர் ஆறுமுகம் தலைமையில் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.