தேச கலாச்சார பண்புகளுக்காக ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களை புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை.
திருப்பூர் சிவசேனா கட்சியின், யுவசேனா மாநிலத்தலைவர் திருமுருக தினேஷ் செய்தியாளர்களை சந்தித்த போது
ஜனாதிபதி, உச்சநீதிமன்ற நீதிபதி, கவர்னர் உள்ளிட்டோருக்கு சிபிஐ விசாரணை தேவை என கோரிக்கை கடிதம் அனுப்பி உள்ளோம். தமிழகத்திற்கு நிர்பயா ஸ்குவாட் கேட்டிருந்தோம். இதுவரை அமைக்க வில்லை தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளம் வெளிப்படுத்தப்பட்டது. தவறுதலாக நிகழ்ந்திருந்தாலும் பெரிய தவறு. வழக்கை திசை திருப்பும் வகையில் பேசிவரும் ஆர்.எஸ்.பாரதி மீது என்.ஐ.ஏ. சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். அண்ணாமலை ஆடம்பர விளம்பர அரசியல் செய்து வருகிறார். ஹிந்து மத வழிபாட்டை கொச்சைப்படுத்தும் விதமாக செயல்படுகிறார். அண்ணாமலை இது போன்ற செயல்களை கைவிட வேண்டும். செய்தியாளர் சந்திப்பில் ஒருமையில் பேசுவதை தவிர்க்க வேண்டும். பாஜக அதிக வாக்குகள் பெற வேண்டும் என்றால் அனைத்து வலதுசாரி இயக்கங்களையும் ஒன்று சேர்க்க வேண்டும். தினமும் பத்திரிகையை திறந்தால் என் படம், டிவி போட்டால் என் முகம் என விளம்பர வேடிக்கை அரசியல் செய்து வருகிறார். புள்ளி விவரங்களால் அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்கும் போக்கை அண்ணாமலை கைவிட வேண்டும்.
பெண்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து அறிக்கை வெளியிட வேண்டும். நிர்பயா ஸ்குவாட் அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது. அதனை பெற்று பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
தேச கலாச்சார பண்புகளை காக்க ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களை புறக்கணிக்க வேண்டும். மீறி இது போன்ற செயல்கள் நடைபெற்றால் சட்ட ரீதியான போராட்டத்தை மேற்கொள்வோம்.
சாட்டை எடுத்து அடித்துக் கொள்ளும் அண்ணாமலை பொள்ளாச்சி சம்பவத்தின் போதும் அடித்துக் கொண்டு இருக்கலாம்.
அண்ணாமலை அந்த சமயத்தில் கட்சி பதவியில் இல்லை என்றாலும் எடப்பாடி உடன் தான் கூட்டணி அமைத்து இருந்தார்.
தமிழக பாஜகவில் சாதிய பாகுபாடு பார்க்கிறார்கள். எங்கள் ஒத்துழைப்பை கூட ஏற்காத நிலையில் தமிழகத்தில் பாஜக எப்படி காலூன்ற முடியும்.