கோவை முதல் மயிலாடுதுறை வரை செல்லும் ஜன் சதாப்தி விரைவு ரயில் ஆனது வாரம் ஆறு நாட்கள் செயல்படுகிறது. கோவையில் இருந்து மயிலாடுதுறை வரை செல்லும் இந்த ரயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். காலை 7:15 மணி அளவில் புறப்படும் இந்த ரயிலானது மதியத்திற்குள் மயிலாடுதுறை சென்றடைகிறது. மறு மார்க்கமாக மாலை மயிலாடுதுறையில் இருந்து புறப்படும் இந்த ரயில் இரவு 9:30 மணி அளவில் கோவை வந்தடைகிறது.

2003 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த ரயில் சேவையானது 21 ஆண்டுகாலம் நிறைவடைவதை முன்னிட்டு பயணிகளின் வசதிகளை பூர்த்தி செய்யும் விதமாக புதுப்பொலிவுடன் LHB பெட்டிகள் இணைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதனை இன்று கோவை ரயில் நிலையத்தில் பயணிகள் கேக் வெட்டி மகிழ்ந்தனர்.

இந்த LHB பெட்டிகள் என்பது அதிக இடமும், நிலைத்தன்மையும் கொண்டது என்பதும் அதிக திறன் மற்றும் எலக்ட்ரானிக் கட்டுப்பாடுகளையும் வேகத்திற்காகவும் வடிவமைக்கப்பட்ட பெட்டிகள் ஆகும்.