குமரி மாவட்டம் எட்டாமடை தேவாலயம் முன்பு மக்கள் பரபரப்பாக நடமாடிக் கொண்டிருக்கும் சாலையில் கடந்த 21ம் தேதி தடிக்காரன்கோணம் பகுதியை சார்ந்த ராஜன் என்பவரின் மகன் மினிஷான் மற்றும் பால் குளத்தை சார்ந்த ராணி என்பவருடைய மகன் சுபின் இருவரும் தடிக்காரன் கோணம் பகுதியைச் சார்ந்த சார்லஸ் மகன் பிரதீப் என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.மேலும் அவரது மர்ம உறுப்புகளில் உதைத்தும், அடித்தும் கொலை செய்யும் நோக்கத்துடன் தாக்கியுள்ளதாகவும் தெரிகிறது.இந்த சம்பவம் அப்பகுதியில் அருகில் உள்ள வீட்டிலிருந்த CCTV யில் பதிவாகியுள்ளது.இதில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பிரதீப் என்பவர் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் CCTV சாட்சியங்களை கொடுத்து புகார் அளித்துள்ளார். குற்றவாளிகள் பிரதீப்பை கொலை செய்யும் நோக்கத்தோடு சுற்றி தெரிவதாகவும் கூறப்படும் நிலையில் மறுமுறை பிரதீப் பாதிக்கப்படும் முன்பு பூதப்பாண்டி காவல் நிலையம் போலிஸார் துரித நடவடிக்கை எடுக்க கோரிக்கை. இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.