திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த தேவம் பாளையம் பகுதியில் சேர்ந்தவர் சங்கர் 43 பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார் இவருக்கு மிதுன் 12 ஜோகித் 9 என்ற இரண்டு மகன்கள் உள்ளனர் இவர்களையும் மற்றும் நண்பரின் மகன் சரண்ஜித் 13 என்ற மூன்று போரையும் ஆண்டிபாளையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் இருந்து அவிநாசி நோக்கி அழைத்துச் செல்லும்போது மங்களம் சாலை வெங்கமேடு பகுதி அருகே மங்களம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சங்கர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். பலத்த காயமடைந்த இவரது மகன் ஜோதிக் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.