கோவை கிணத்துக்கடவு காரச்சேரியை சேர்ந்தவர் தங்கராஜ் (40). கார் ஓட்டுநர். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை செட்டிபாளையத்தில் இருந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு, நேர் மோதி விபத்தில் சிக்கினார். தலையில் பலத்த காயமடைந்த அவர் கோவை சுந்தராபுரம் தனியார் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார். இந்நிலையில் தங்கராஜ் மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் தங்கராஜ் இருதயம், சிறுநீரகம், கல்லீரல், தனமாக வழங்க குடும்பத்தினர் ஒப்புதல் வழங்கினர். இதையடுத்து அவரது இருதயம் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கும், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் கோவை, மற்றும் ஈரோடு மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. உடல் உறுப்பினர்கள் அனுப்பி வைப்பதை ஒட்டி கோவை மாநகர சாலையில் ஆம்புலென்ஸ் செல்ல ஏதுவாக போக்குவரத்து சீரமைப்பு பணிகளை மாநகர போலீசார் மேற்கொண்டனர்.