ஐம்பதுக்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகிறார்கள். லட்டு தயாரிப்புக்காக 1500 கிலோ மாவு,4500 கிலோ சீனி,150 கிலோ முந்திரி பருப்பு,50 கிலோ ஏலக்காய்,50 கிலோ கிராம்பு மற்றும் 65 டின் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்று கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கங்கப்படுகிறது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோயிலில் ஒரே கல்லில் ஆன 18 அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் அமாவாசை மற்றும் மூல நட்சத்திரத்தில், ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம்.அந்த வகையில், இந்த ஆண்டிற்கான ஆஞ்சநேயர் ஜெயந்தி வரும் ஜனவரி 30 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதனால் விழாவில் கலந்து கொள்ளும் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்க,1500 கிலோ மாவு, 4500 கிலோ சீனி,150 கிலோ முந்திரி பருப்பு,50 கிலோ ஏலக்காய்,50 கிலோ கிராம்பு மற்றும் 65 டின் எண்ணெய் கொண்டு, ஒரு லட்சம் லட்டு தயாரிக்கும் பணி, சுசீந்திரம் தாணு மாலயன் சுவாமி கோயிலில் சிறப்பு பூஜையுடன் துவங்கியது. இந்த லட்டு தயாரிக்கும் பணியில், 50 பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனர்.