தமிழகத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி சுனாமி எனும் ஆழி பேரலையால் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் வசித்து வந்த ஏராளமான மீனவர்கள் கடல் அலையால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர். ஒவ்வொரு ஆண்டும் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு உறவினர்கள் மற்றும் மீனவர்கள் சுனாமி தினமான இந்நாளில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், 20 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது இதில், செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம், கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம், புதுப்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மீனவர் பகுதிகளில் 20 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை மீனவர்கள் அனுசரித்தனர்.