நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து பேசிய பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சம்பவத்தால் கடந்த இரண்டு நாட்களாக நாடாளுமன்றம் முடங்கி வரக்கூடிய நிலையில் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்ததை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் திமுகவினர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.