திருப்பூர்: வெள்ளகோவில் அருகே உத்தமபாளையத்தில் வட்டமலை கரை ஓடை அணை உள்ளது. அணை, 650 ஏக்கர் பரப்பளவில், 27 அடி உயரத்தில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன விஸ்தரிப்பு திட்டத்தின் கீழ் அமைந்துள்ளது. இதன் மூலம் உத்தமபாளையம் சுற்றியுள்ள 30 கிராமங்களில் ஆறாயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசனம்பெறும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

கடந்த 1980ல் கட்டப்பட்ட இந்த அணையில், 25 ஆண்டுகள் கடந்து, கடந்த 2021ல், தண்ணீர் திறந்து விடப்பட்டது. விவசாயிகளுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.அதன் பின்னர் தண்ணீர் திறந்து விடப்படாததால் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அகல்விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தி வருகின்றனர் அதன் படி இன்றும் வழிபாடு நடத்தப்படுகிறது