கோவை மாநகரின் அதிகப்படியான போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மேற்கு புறவழிச் சாலை திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

பக்கசாலைகள் இல்லாமல் நான்கு வழி சாலையாக இருக்கும் இத்திட்டத்தால் விவசாயிகள், கிராமப்புற வாசிகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு

முதற்கட்டப் பணிகள் 200 கோடி ரூபாய் செலவில் 11 கிலோ மீட்டரில் முடியும் தருவாயில் இருக்கிறது

3 கட்டமாக 32 கிமீ கோவை மதுக்கரை மைல்கல் பகுதியில் தொடங்கி நரசிம்ம நாயக்கன்பாளையம் வரையில் மேற்கு புறவழி சாலை அமைக்கப்பட உள்ளது.

அதன்படி மதுக்கரை முதல் மாதம்பட்டி வரை, மாதம்பட்டி முதல் கணுவாய் வரை, கணுவாய் முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை என மூன்று கட்டங்களாக இந்த சாலை அமைய உள்ளது.