திருப்பூர் காங்கேயம் சாலை டி எஸ் கே பேருந்து நிறுத்தம் எதிரே உள்ள அமர்ஜோதி கார்டன் பகுதியில் குடியிருந்து வருபவர் விக்னேஷ் பாலி பேக் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா எலக்ட்ரிக் கார் வாங்கி பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் இன்று காலை விக்னேஷின் அண்ணன் வினோத் காரை எடுத்துக்கொண்டு நிறுவனத்திற்கு சென்று மீண்டும் வீட்டிற்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். சிறிது நேரத்தில் காரின் முன் காரின் முன் பக்க பேட்டரி தீப்பிடித்து எரிய துவங்கியது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வினோத் மற்றும் விக்னேஷ் குடும்பத்தினர் இணைந்து வீட்டிலிருந்து தண்ணீர் மூலம் தீயை அணைக்க முற்பட்டனர் ஆனால் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்து காரின் முன் பகுதி மற்றும் உட்புறங்கள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையினர் காரில் பற்றிய தீயை அணைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.