திருப்பூர் அவிநாசி சாலையில் தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் பயணித்து வருகின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி கல்லூரிக்கு செல்லும் வாகனங்கள் மற்றும் பனியன் நிறுவனங்களுக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகம். இந்நிலையில் இன்று காலை திருப்பூரில் இருந்து அவிநாசி நோக்கி சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அம்மாபாளையம் சாலை நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை கடந்து கோவையில் இருந்து அவிநாசி வழியாக திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பேருந்தின் முன்பக்கம் மற்றும் காரின் முன் பக்கம் சேதமடைந்த நிலையில் காரில் பயணித்த ஓட்டுநர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து விபத்து குறித்து திருமுருகன்பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.