ஜெயங்கொண்டம் அருகே பெண்ணிடம் தாலி செயினை பறித்து சென்றதால் கழுத்தில் ஏற்பட்ட காயங்களுடன் பாதிக்கப்பட்ட பின் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள விழப்பள்ளம் வடக்கு தெருவை சேர்ந்த பிரேம் ஜோசப் என்பவரது மனைவி குழந்தை தெரஸ் 37 இவர் ஜெயங்கொண்டத்திலிருந்து விழப்பள்ளம் கிராமத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் அப்போது சின்ன வளையம் பெட்ரோல் பங்க் வேகத்தடை அருகில் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இருவர் குழந்தை தெரஸ் கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் தாலி செயினை பறித்து விட்டு வேகமாக இருசக்கர வாகனத்தில் சென்று விட்டனர். இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த குழந்தை தெரஸ் தாலி செயினை பறித்ததால் கழுத்தில் ஏற்பட்ட காயங்களுடன் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலிசார் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.