ஆனைமலை பகுதியில் பிடிபட்ட ஏழு அடி நீள மலைப்பாம்பு.
லாவகமாக மீட்கப்பட்டு வனபகுதிக்குள் விடப்பட்டது
ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் வருகின்ற டிசம்பர் 12ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
இந்த கும்பாபிஷேக விழாவிற்கு சுமார் நான்கு லட்சத்திற்கு மேல் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு போக்குவரத்து வசதிக்காக வாகன நிறுத்தும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, கோயில் நிர்வாகம் சார்பில் சுத்தம் செய்யும் பணியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
வாகன நிறுத்தத்திற்காக ஆனைமலையில் பயன்பாட்டில் இல்லாத பேருந்து நிலையத்தை சுத்தம் செய்ய ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ஊழியர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது சுமார் 7அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று தென்பட்டது.இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர்.
இதனால் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் நிம்மதி அடைந்தனர்.