பவானி அருகே கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் நடத்திய அதிரடி வாகன சோதனையில் சொகுசு காரில் கடத்திவரப்பட்ட 46 கிலோ கஞ்சா பறிமுதல்.
காரில் ரகசிய அறை அமைத்து கஞ்சா கடத்திய ஒடிசா மாநில வாலிபர் சிக்கியது எப்படி
கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா போதை பொருள் கடத்திச் செல்லபடுவதாக ஈரோடு மாவட்டம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது,,
இந்தத் தகவலை அடுத்து ஈரோடு மாவட்ட எல்லையான லட்சுமிநகர் பகுதியில் உள்ள வாகன சோதனைச் சாவடியில் சித்தோடு காவல் ஆய்வாளர் ரவி மற்றும் பவானி போக்குவரத்து காவல் ஆய்வாளர் சரவணகுமார் தலைமையிலான போலீசார் குவிக்கப்பட்டு கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை முதல் கடந்து சென்ற அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி தீவிர சோதனை செய்து அதன் பின்னர் அனுப்பினர்,
இந்த நிலையில் கேரளா பதிவெண் கொண்ட சொகுசுகாரில் வந்த நபர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டதை கண்டதும் தேசிய நெடுஞ்சாலையை விட்டு சர்வீஸ் சாலையில் திருப்பி செல்ல முயன்றுள்ளார்.
இதனை கவனித்த போலீசார் காரை சுற்றிவளைத்து மடக்கி பிடித்து சோதனை செய்தனர்,
சோதனையின் போது காரின் பின்புற சீட்டின் பின்னால் ரகசிய அறை அமைக்கப்பட்டிருப்பதை போலீசார் கண்டறிந்தனர்,
தொடர்ந்து அந்த அறையை திறந்து பார்த்தபோது அதில் கிலோ கணக்கில் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.,
தொடர்ந்து போலீசார் ரகசிய அறையில் பதுக்கி வைத்திருந்த கஞ்சா பொட்டலங்களை வெளியே எடுத்ததில் 46 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது,
இதை அடுத்து சொகுசு காரை ஓட்டி வந்த நபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சாருங்கமஜ்கி (36) என்பதும்,
ஆந்திர மாநிலம் நெல்லுருவில் இருந்து கஞ்சாவை வாங்கிக்கொண்டு அதனை கேரள மாநிலம் கொச்சினுக்கு கடத்திச் சென்றதும் தெரியவந்தது,
தொடர்ந்து போலீசார் சொகுசு கார் மற்றும் காரில் கடத்தி வரப்பட்ட 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 46 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் கடத்தலில் ஈடுபட் சாருங்கமஜ்கி மீது வழக்கு பதிவு செய்து ஈரோடு மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
காரின் பின்புற சீட்டில் ரகசிய அறை அமைத்து கஞ்சா கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே சிறப்பாக செயல்பட்டு கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசாருக்கு ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.