கோவை மசக்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அபிமன் சூர்யா (26). இன்று மாலை கோவையில் இருந்து புறப்பட்டு கொச்சின் – சேலம் ஆறுவழிச் சாலையில் தனது சொகுசு காரில் அதிவேகமாக ஓட்டி வந்துள்ளார். அப்போது, திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து தெக்கலூர் வடுகபாளையம் பிரிவு அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற பெட்ரோல் டேங்கர் லாரியின் பின்னால் மோதி பெரும் விபத்துக்கு உள்ளானது. அதிவேகத்தின் காரணமாக லாரியின் பின்னால் இருந்த இரும்பு தடுப்புகள் சொகுசு காரை செதுக்கியதால் காரின் முன்பகுதி முற்றிலும் சிதைந்ததோடு சம்பவ இடத்திலேயே அபிமன் சூர்யாவின் தலை துண்டித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசி போலீசார் அபிமன் சூர்யாவின் பிரேதத்தை அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அபிமன் சூர்யா கோவையிலிருந்து வரும் போதே அதிவேகமாக ஓட்டி பல்வேறு வாகனங்களை அச்சுருத்தும் வகையில் மிக வேகமாக ஆபத்தான முறையில் முந்தி முந்தி வந்ததாக அந்த வழியாக வாகனம் ஓட்டி வந்த சிலர், தங்களது வாகனங்களை நிறுத்தி போலீசாரிடம் இந்த தகவல்களை சொல்லி சென்றுள்ளனர். மேலும், இந்த விபத்து குறித்து அவிநாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.