திருப்பூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறையினர் உடன் இணைந்து சிபிஐ விசாரிக்க தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும். சீமான் தமிழகத்தில் பெரும் தலைவர். அவர் எனது அண்ணன். வருண் ஐபிஎஸ் விவகாரத்தை பெரிது படுத்த வேண்டாம். துப்பாக்கி தூக்கும் இடத்தில் தூக்கியே ஆகவேண்டும் காவல்துறைக்கு அதிகாரம் கொடுக்கும் நேரம் வந்து விட்டது என அண்ணாமலை பேட்டி.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சேமலை கவுண்டம்பாளையத்தில் கடந்த 29ஆம் தேதி அன்று விவசாயி தேவசிகாமணி அவரது மனைவி அலமேலு மற்றும் மகன் செந்தில்குமார் மூவரும் கொலை செய்யப்பட்டு வீட்டில் இருந்த எட்டு பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது இந்த சம்பவம் தொடர்பாக 14 தனி படைகள் அமைத்து திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உயிரிழந்த செந்தில்குமாரின் மனைவி கவிதாவிடம் பேசும்போது இந்த சம்பவம் தொடர்பாக தமிழக காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் 14 தனி படைகள் அமைத்து பிரம்மாண்டமாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் எனினும் சிபிஐ போன்ற குற்ற புலனாய்வில் தனித்துவம் பெற்ற துறையை உடன் சேர்த்து விசாரிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு கடிதம் எழுதுவதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அண்ணாமலையிடம் பேசிய பாதிக்கப்பட்ட கவிதா இரவு 12 மணி அளவில் கொலை சம்பவம் நடைபெற்ற நிலையில் காலை வரை தனது மாமனார் தெய்வசிகாமணி உயிருக்கு போராடி வந்ததாகவும் அவர் துடித்த உயிர் வலியை குற்றவாளிகள் அனுபவிக்க வேண்டும் எனவும் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து அவர்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எத்தனை நாட்கள் ஆனாலும் அவர்களை நிச்சயம் கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில் கொங்கு பகுதியில் விவசாயம் சார்ந்த மக்கள் அதிக அளவில் உள்ளனர் இதில் சேமலை கவுண்டம்பாளையம் பகுதியில் 29 தேதி கொடூரமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளோம். தமிழக காவல்துறையின் நடவடிக்கைகளை நாங்கள் பாராட்டுகிறோம் மேலும் ஐபிஎஸ் என்ற முறையில் தமிழக காவல் துறையோடு எப்போதும் இருப்போம்.
பாஜக சார்பில் அம்த்ஷாவிற்கு கடிதம் எழுத உள்ளோம். அதில் இந்த வழக்கை காவல் துறையுடன் இணைந்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை தெரிவிக்கப்படும் எனவும் முதல்வரும் இதற்கு செவிசாய்க்க வேண்டும். என கேட்டுக்கொண்டார். கடந்த ஆண்டு தோட்டத்தில் குடிக்க வேண்டாம் என சொன்னதற்கு 4 பேர் கொலை செய்யப்பட்டனர். தற்பொழுது அதேபோல மூன்று கொலைகள் நடைபெற்று உள்ளது. இது முதலும் முடிவும் ஆக இருக்க வேண்டும். போதைக் கலாச்சாரத்தை பார்த்து ஒரு தலைமுறை வளர்கிறது. இவர்கள் கையில் ஆயுதம் சென்றால் அது அபாயம். முதல்வரும் இதனை புரிந்து கொண்டு சிபிஐக்கு அனுமதி வழங்க வேண்டும். உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றால் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை போய் விடும். குற்றவாளிக்கு தண்டனை விரைவாக வழங்கப்படவேண்டும். அப்போது தான் எல்லோருக்கும் பயம் வரும். ஆயுதம் எடுக்க நினைப்பவர்களுக்கு இந்த நடவடிக்கை முதலும் முடிவுமாக இருக்க வேண்டும்.
தமிழகத்தில் குற்ற புலனாய்வில் சிறந்த அதிகாரிகளை வரவழைத்து விசாரணை செய்திருக்கலாம். நாங்களும் உங்களோடு வருகிறோம். காவல் துறையுடன் சிபிஐ சேர்ந்து தீர்வு காணுவோம். என தெரிவித்தார் மேலும் காவல்துறையினர் கிராமப்பகுதிகளில் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும். அதேபோல தமிழக அரசும் காவல் துறையினருக்கு வாகனங்கள் தேவையான உபகரணங்களை அதிகப்படுத்த வேண்டும்.
கள்ளச்சாராய மரணத்திற்கு 10 லட்சம் இழப்பீடு வழங்கி உள்ளனர். அதை நாங்கள் தடுக்க வில்லை. ஆனால் இங்கு 4 பேர் கொல்லப்பட்டதற்கு ஏன் தரவில்லை. முதல்வர் உடனடியாக இதற்கு நிவராணம் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பாதித்து வந்தவர்கள் அனைவரும் உயிரிழந்து விடட்னர். அமைச்சர்கள் பலர் நேரில் வந்து ஆய்வு செய்து சென்றுள்ளனர் எனவே முதலமைச்சர் இதனை கருத்தில் எடுப்பார் என நினைக்கிறேன். அந்த கடமை அவருக்கு உள்ளது. என தெரிவித்தார். இந்த விவகாரத்தில் காவல் துறை மீது பழி போடுவதை விட சிஸ்டம் சரி இல்லை. போதிய வாகனம், உள்ளிட்ட வசதிகள் இல்லை. என்று தான் கூற வேண்டும் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் சட்டம் ஒழுங்கு பெயிலியர் ஆகி விட்டது. மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை போகாமல் இருக்க தீர்வு வேண்டும்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 25 லட்சம் பேர் உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களை முறையாக கண்காணிக்க வேண்டும்.
காவல் துறை எங்கே துப்பாக்கி எடுக்க வேண்டுமோ அங்கே எடுக்க வேண்டும். காவல் துறைக்கு அதிகாரம் கொடுக்கும் நேரம் வந்து விட்டது. அதற்காக நான் என்கௌண்டர் செய்ய ஆதரவு இல்லை எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் சீமான் குறித்த கேள்விக்கு
ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் எனது பேட்ஜ் மேட்.
சீமான் தமிழகத்தில் முக்கிய தலைவர்.
அவர் தெரிவித்தது அதிகாரியின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். அது அரசின் கருத்தோ கட்சியின் கருத்தோ இல்லை .
சீமான் எனக்கு அண்ணனை போன்றவர். அவர் இதனை பெருந்தன்மையோடு பெரிது படுத்த வேண்டாம். மேலும் இது பிஜேபி கருத்தும் அல்ல.
அரசியல் தலைவருக்கும் காவல் துறை அதிகாரிக்கும் சண்டை என கொள்ள வேண்டாம். அதனை நாம் தீர்க்க வேண்டும்
அவ்வப்போது நாம் கண்ணாடி பார்க்க வேண்டும். அரசியல் வந்த பிறகு அண்ணாமலை தன்னை திருத்திக் கொள்கிறார். என சீமான் சொன்னால் அதை ஏற்கிறேன். மற்றவர்கள் தவறு என சொன்னால் அதனையும் ஏற்கிறேன். சீமான் எனது அண்ணன் என தெரிவித்தார்.
விகடன் புத்தக வெளியீட்டு விழா நடக்கட்டும்.
விஜய் பேசட்டும். நானும் அம்பேத்கர் குறித்து பேசி உள்ளேன். அம்பேத்கர் கருத்தை கொண்டு செல்லும் ஒரே தலைவர் மோடி மட்டுமே. என பேசினார்.