கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் ஃபெஞ்சல் புயல் கனமழை காரணமாக இரண்டு தினங்களுக்கு முன்பு திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றுக் கரையோரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வனத்துறை அமைச்சர் பொன்முடி முதற்கட்டமாக 188 நபருக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரண தொகை ரூபாய் 2000 மற்றும் அரிசி ஐந்து கிலோ துவரம் பருப்பு ஒரு கிலோ சர்க்கரை வழங்கினார், அதனைத் தொடர்ந்து பேசிய போது, தென்பெண்ணை கரையோரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு இழந்தவர்களுக்கு நிவாரணத் தொகை தொகையை வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார் இன்னும் திருக்கோவிலூர் பகுதியில் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என தெரிவித்தார் இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், கோட்டாட்சியர் வருவாய்த்துறையினர் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர