ஈரோடு..

ரயிலில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்..

ஈரோடு ரயில் நிலையம் வழியாக சென்ற விசாகப்பட்டினம்- கொல்லம் விரைவு ரயிலில் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்திய ரயில்வே போலீசார், பொது பெட்டியில் கேட்பாரற்று கிடந்த இரண்டு பைகளில் இருந்த 9 கிலோ கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினர்..

ஆந்திராவில் இருந்து கஞ்சாவை ரயிலி்ல் கடத்தி வந்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..