தமிழகம் முழுவதும் சுமார் 450 கிரசர்களுக்கு எம்.சான்ட், பி.சான்ட் (செயற்கை மணல்) உற்பத்தி செய்ய அரசு முறையாக அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் பெரும்பாலான கல்குவாரிகளில் விதிகளுக்கு புறம்பாக சட்டவிரோதமாக கற்களை வெட்டி எடுத்து சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வருவதக்கவும் இதனால் முறைகேடாக செயல்படும் கல்குவாரி மற்றும் கிரசர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபோல் எம்.சான்ட், பி.சான்ட், ஜல்லி ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டு ஜி.எஸ்.டியுடன் சேர்த்து வருகிற 1ம் தேதி முதல் அமல்படுத்துவதாக கல்குவாரி கிரசர் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் அறிவித்துள்ளதாகவும் .,

இந்த விலை உயர்வு காரணமாக தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் .,
எனவே உயர்த்தப்பட்ட விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். கல் குவாரிகளில் கிரசர்களில் உற்பத்தி செய்யப்படும் எம்.சான்ட், பி.சான்ட், ஜல்லி போன்ற கனிமங்களை அரசு அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்த்து உற்பத்தி செலவை கணக்கிட்டு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

ள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் சிவில் என்ஜீனியர்ஸ் சங்கம், , பில்டர்ஸ் அசோசியேஷன் ., ஊத்துக்குளி டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர்., திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆட்சியரிடம் மனு அளித்தனர்