மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி கிராமத்தில் டங்ஸ்டன் எனும் கனிம சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வல்லாளபட்டி வெள்ளி மலையாண்டி கோவில் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி கிராமத்தில் ஏழு மலைகளை உள்ளடக்கிய பகுதி பல்லுயிர் வாழும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு வனத்துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு இங்கு 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் எனும் கனிம சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், இன்று மூன்றாவது கட்டமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“போராட்டங்கள், கூட்டங்களுக்காக பல லட்சம் செலவழித்தோம், கட்சியில் மரியாதை இல்லை”
நாமக்கல் மாவட்ட நாதக முன்னாள் செயலாளராக இருந்து வந்த வினோத் குமார் உட்பட 50 பேர் கட்சியில் இருந்து கூண்டோடு விலகல்