உலக நாடுகள் அதிர, கண்டெயினர் ஷிப்பிங் துறையில் கால் பதிக்கும் என்று கடந்த 25-11-24 அன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது
இது என்ன பெரிய விஷயம் என்பவர்கள் மேலே படியுங்கள்.!
Global shipping என்றால் என்ன.?
உலகளவில் எந்த ஒரு வர்த்தகமும், கப்பல் போக்குவரத்து மூலமே 95% நடைபெறுகிறது. மிகமிக கடினமான தொழிலான இதில் இப்போது வரை மேற்கத்திய நாடுகளும் சீனாவும் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகின்றன.
ஒரு Global shipping நிறுவனத்தை நடத்த, பலவற்றை ஒருங்கிணைக்க வேண்டும். கண்டெயினர்கள், துறைமுகங்களில் அவற்றை வைக்க இடம், தொழிற்சாலையிலிருந்து துறைமுகத்திற்கு கொண்டு வருதல், கொண்டு செல்லுதல், கப்பல்களில் தளம் பிடித்தல், வெளிநாட்டுத் துறைமுகத்தில் இடம், மீண்டும் கண்டெயினர்களை பெறுதல், அங்கிருந்து சரக்குகளை கொண்டு வருதல் என மாபெரும் சக்ரவியூகம் இது.!
மத்திய அரசின் திட்டம் என்ன?
ஏற்கனவே ட்ரான்ஸ்ஷிப் மென்ட் துறைமுகங்கள் பலவற்றை உருவாக்கியுள்ளனர். தற்போது விழிஞ்சம் மற்றும் வாத்வான் போன்ற மிகப்பெரிய துறைமுகங்களில் மாற்றங்களை கொண்டுவர உள்ளது.!
IMAC, INSTC, Chennai–Vladivostok Maritime Corridor, என பல முன்னெடுப்புகள் நடைபெறுகின்றன.
Freight Corridor ரயில் இருப்பு பாதைகள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது.
இதன் மூலம் குறைந்த நேரத்தில் துறைமுகத்தை அடைவதும், தொழிற்சாலைகளை அடைவதும் திட்டமிடப் படுகின்றன.
Container Corporation of India (CONCOR) மூலம் 50 ஆயிரத்துக்கும் அதிகமான கன்டெயினர்கள் உருவாக்கப்பட்டு உபயோகப்படுத்தப் படுகின்றன. இந்த நிறுவனம் தற்போது ரயில்வே துறையின் கீழ் இயங்கி வருகிறது.
இதை விரிவுபடுத்தி தனியாக்க திட்டமிடுகின்றனர். இதன் மூலம் CONCOR கன்டெயினர்கள் உலகளவில் செல்ல திட்டம் தீட்டப்பட்டுள்ளது.!
அடுத்த கட்டமாக பாரதத்துக்கென சொந்தமாக சுமார் 50 போக்குவரத்து கப்பல்கள் வாங்க அல்லது லீசுக்கு எடுக்கவும் திட்டமிடுகின்றனர்.
முதற்கட்டமாக 2025 ஆம் ஆண்டு முதல் மேற்காசிய மற்றும் தெற்காசிய நாடுகளுக்கிடையே இவை செயல்படும். அடுத்த 5 வருடத்தில் உலகம் முழுவதும் செயல்பட திட்டமிட்டுள்ளனர்.
தற்போது உலகளவில் உள்ள பெரிய நிறுவனங்கள்.!
The Mediterranean Shipping Company (MSC) 823 கப்பல்கள்
APM-Maersk – 775 கப்பல்கள்
CMA CGM Group – 600 கப்பல்கள்
COSCO – 480 கப்பல்கள்
Hapag-Lloyd – 250 கப்பல்கள்
ZIM Integrated Shipping Services Ltd – 129 கப்பல்கள்
இது தவிர சுமார் 30-க்கும் மேற்பட்ட சிறிய நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் 20 வருடங்களுக்கும் மேலான அனுபவம் கொண்டவை.
இந்த நடவடிக்கை மூலம் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு குறைந்த செலவு ஏற்படும் என கணக்கிடுகின்றனர்.
இந்திய அரசின் இந்த முயற்சிக்கு நமது ஆதரவும் வாழ்த்துக்களும்.
வெறும் ஐடி (I.T) மட்டுமே வேலை வாய்ப்பை பெருக்கும் என்றெண்ணி படிக்காதீங்க பிள்ளைகளே…!,
பல புதிய துறைகள் இந்தியாவில் பெரும் வளர்ச்சி பெற உள்ளது.
சரியாக தகவல்களை சேகரித்து கணித்து உங்கள் எதிர்காலத்தை திட்டமிடுங்கள். வாழ்த்துக்கள்…