கடந்த 2016 ஆம் ஆண்டு பெண் பாலியல் வன்புணர்ச்சி வழக்கில் குற்றவாளிக்கு பத்து ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் தீர்ப்பு வழங்கிய மகிளா நீதிமன்றம்

விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் 20 வயது பெண்ணை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொள்வதாக கூறி பாலியல் வன்புணர்ச்சி செய்து ஏமாற்றியதாக இளம்பெண் அளித்த புகாரின் பேரில் சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த குமரேசன்(36) என்பவரை விழுப்புரம் மகளிர் காவல் நிலைய போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
வழக்கு விசாரணை விழுப்புரம் மகிளா சிறப்பு நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்த நிலையில் தீர்ப்பு அளித்த நீதிபதி இளவரசன், குறவாளிக்கு பாலியல் வன்புணர்ச்சி பிரிவுக்கு 10 வருடம் தண்டனையும், திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய பிரிவுக்கு 6 மாத தண்டனையும்,ரூபாய் 15,000 அபராதம் தீர்ப்பு வழங்கப்பட்டது.
