⛽ உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பேசப்படும் நிலையில், சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த காட்சியில் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் 20 லிட்டர் தண்ணீர் கேனை வைத்து, பெட்ரோல் பங்கில் அதில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டு செல்கிறார்.

😄 “சென்னை வரை போகணும், அதான் ஸ்டாக் வைக்கிறேன்” என அவர் கூறும் காரணம் சுற்றியிருந்தவர்களை சிரிக்க வைத்தாலும், இது மிகவும் ஆபத்தான செயல் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

⚠️ பிளாஸ்டிக் கேன்கள் பெட்ரோல் சேமிக்க பாதுகாப்பானவை அல்ல. கசிவு ஏற்பட்டால் வண்டியின் சூட்டால் அது பெரிய விபத்துக்கு காரணமாகலாம்.

#ViralVideo #FuelSafety #Petrol #RoadSafety #TamilNews