🚨 பயங்கரவாத ஆதரவு பதிவு – 6 பேர் கைது.
திருப்பூர்: பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
🔎 விசாரணையில், ஊத்துக்குளியில் 2 பேர், பல்லடம் பகுதியில் 3 பேர், திருமுருகன் பூண்டியில் ஒருவர் என மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
👥 இவர்கள் அனைவரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும், போலி ஆதார் அட்டைகள் பயன்படுத்தி பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
📱 கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 8 செல்போன்கள் மற்றும் 16 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
👮♂️ இவர்களுக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
#Tiruppur #TerrorSupport #PoliceAction #TamilNaduNews #BreakingNews
