🔥🚨 கேரளா–தமிழக எல்லையில் காட்டுத்தீ: மக்கள் மத்தியில் பெரும் பீதி.
Kerala – தமிழக எல்லையிலுள்ள ஆறுகாணி அருகே சூரவகாணி மற்றும் கமியூனிட்முக் பகுதிகளில் கடும் வெயில் காரணமாக திடீரென காட்டுத்தீ பரவி வருகிறது.
பாறைகளில் நிலவும் அதிக வெப்பம் மற்றும் பலத்த காற்றின் தாக்கத்தால் தீ வேகமாகப் பரவி, கீழ்ப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை நோக்கி முன்னேறுகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் தீயை கட்டுப்படுத்த தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கோடைக்காலம் முழுமையாக தொடங்கும் முன்பே ஏற்பட்ட இந்த தீ விபத்து, மலைக்கிராம மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
