📰 “வெற்றி பெற்றால் வரி குறைப்பு” – பாஜக வேட்பாளர் உறுதி .
திருப்பூர் தெற்கு தொகுதியில் NDA சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் காடேஸ்வரா.எஸ். தங்கராஜ், வேட்பு மனு தாக்கல் செய்த பின் பேசுகையில், “நான் வெற்றி பெற்றால் வரி கட்டாயம் குறைக்கப்படும்” என தெரிவித்தார்.
மின் கட்டண உயர்வு, சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள், குப்பை மேலாண்மை குறைபாடு உள்ளிட்ட விவகாரங்களில் திமுக அரசை விமர்சித்தார்.
பொதுமக்களின் அன்றாட தேவைகளை முன்னிறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். ✨
#BJP #Tiruppur #Election2026 #TaxReduction #TamilNaduPolitics #PoliticalNews #BreakingNews
