📰 பண்ருட்டியில் ரூ.4.24 கோடி அரசு திட்டப் பணிகள் – முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் தொடக்கம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (5.1.2026) பல்வேறு அரசு திட்டப் பணிகளை காணொளி மூலம் தொடங்கி வைத்தார்.

ரூ.2.19 கோடி மதிப்பிலான அறிவுசார் மையம்–நூலகம் உள்ளிட்ட பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் உட்பட மொத்தம் ரூ.4.24 கோடி மதிப்பிலான பணிகள் துவக்கப்பட்டன.

தொடர்ந்து நகர மன்ற தலைவர் க.ராஜேந்திரன் தலைமையில் அறிவுசார் மையத்தில் குத்துவிளக்கு ஏற்றப்பட்டது. நகராட்சி அதிகாரிகள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

#Pannruti
#CuddaloreDistrict
#CMStalin
#MKStalin
#TamilNaduGovt
#DevelopmentWorks
#EducationDevelopment
#PublicWelfare
#Municipality