📰 தொழிலாளர் சட்டங்களுக்கு எதிர்ப்பு: திருச்சியில் ரயில் மறியல் போராட்டம்.
📍 திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பல்வேறு தொழிற்சங்கங்கள், விவசாயிகள் மற்றும் இடதுசாரி அமைப்புகள் இணைந்து தொழிலாளர் சட்ட தொகுப்பை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
🚩 பெரியார் சிலை அருகே தொடங்கிய பேரணி ரயில் நிலையம் சென்றடைந்து மறியல் போராட்டமாக மாறியது. ⚠️ போராட்டக்காரர்கள் தடுப்பு வேலியை மீறி தண்டவாளத்தில் அமர்ந்ததால் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
👮♂️ பின்னர் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
