📰 திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பல்வேறு திட்டங்கள் தொடக்கம்.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று திருச்சியில் மலைக்கோட்டை சருக்கு பாறை பகுதியில் வாகன நிறுத்துமிடத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து தாயுமானசுவாமி திருக்கோயிலில் ரூ.57.80 லட்சம் மதிப்பீட்டில் அம்மன் புதிய மரத்தேர் திருப்பணிகளை தொடங்கி வைத்தார்.
மேலும் தெப்பக்குளம் பகுதியில் துணை சுகாதார நிலையத்தையும் திறந்து வைத்தார்.
இதில் எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ், திமுக நிர்வாகிகள், அதிகாரிகள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
#Trichy
#AnbilMaheshPoyyamozhi
#DMK
#RockFortTemple
#ThayumanaswamyTemple
#GovernmentProjects
#SchoolEducationMinister
#TamilNaduNews
