📰 திமுக ஆட்சி வந்தால் பங்கு கோரிக்கை ஏற்கப்படாது – கோவில்பட்டியில் வைகோ பேச்சு.

📍 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “திமுக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தால், ஆட்சியில் பங்கு கோரிக்கைகள் ஏற்கப்படாது” என தெரிவித்தார்.

🤝 திராவிட இயக்கத்தை பாதுகாக்க திமுக கூட்டணியில் உறுதியாக இருப்பதாகவும், முதல்வர் ஸ்டாலின் மீண்டும் ஆட்சியை தொடர்வார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார்.

⚠️ மேலும், மத்திய அரசின் கொள்கைகள் மற்றும் ‘வந்தே மாதரம்’ சட்ட மசோதாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

#Vaiko #MDMK #DMKAlliance #Kovilpatti #TamilNaduPolitics