📰 திண்டுக்கல் அருகே 3 பிளாஸ்டிக் குடோன்களில் பயங்கர தீ விபத்து – 4 மணி நேரமாக தீயணைப்புத் துறையினர் போராட்டம்.

திண்டுக்கல் அருகே சின்னபள்ளப்பட்டி பகுதியில், சின்னபள்ளப்பட்டியைச் சேர்ந்த ஆரிப் அமானுல்லா என்பவருக்கு சொந்தமான MRA டிரேடர்ஸ் நிறுவனத்தின் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் குடோன் உட்பட 3 குடோன்களில், அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும், திண்டுக்கல் தீயணைப்பு நிலைய மாவட்ட உதவி அலுவலர் மயில்ராஜ் தலைமையில், 5 தீயணைப்பு வண்டிகள் விரைந்து சென்று, 4 மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

🔥 🚒 ⏱️

#Dindigul#FireAccident#PlasticGodown#FireAndRescue#TamilNaduNews#BreakingNews#EmergencyServices#Chinnapallapatti