பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் போலீசாரை அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், அவரை ரிமாண்ட் செய்ய வேண்டும் என்ற அரசு தரப்பு கோரிக்கையை திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண்–1 நீதிபதி அனு ஸ்ருதி நிராகரித்தார். திருச்சி சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்த வழக்கில், அரசு தரப்பு மற்றும் சவுக்கு சங்கர் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ரிமாண்ட் தேவையில்லை என உத்தரவிட்டார். இதனால் அரசு தரப்பு கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டது.
#SavukkuShankar
#CourtOrder
#TrichyCourt
#CyberCrime
#LegalNews
